இடைத்தேர்தல் எப்போது? நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூரில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஏ.கே.போஸ் மற்றும் மு.கருணாநிதி காலமானதை அடுத்து விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று இன்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது
இன்றைய விசாரணையின்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யவிரதா சாஹூ நேரில் ஆஜராகி பதிலளித்தார். அப்போது அவர், திமுக தலைவர் கருணாநிதி காலமானதை அடுத்து காலியான திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 7 ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தீர்ப்பு வந்ததும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தீர்ப்பை பொறுத்தே திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
தேர்தல் அதிகாரியின் இந்த விளக்கத்தை அடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக மதுரை ஐகோர்ட் அறிவித்துள்ளது.