இடைத்தேர்தல் தேதி திடீர் மாற்றம்: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடப்பதாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன
சமீபத்தில் கர்நாடகாவில் 17 எம்எல்ஏள் ராஜினாமா செய்த நிலையில் அதில் 15 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் அக்டோபர் 21ம் தேதி கர்நாடகத்தில் உள்ள 15 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென இந்த தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் சுப்ரீம் கோர்ட் கேட்டுக்கொண்டதால் இந்த தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மாற்றி அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது