இண்டர்நெட் பயன்பாட்டில் டில்லியை பின்னுக்கு தள்ளியது தமிழகம்.
இந்திய அளவில் இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்தும் மாநிலம் எது என்ற கருத்துக்கணிப்பு ஒன்று சமீபத்தில் நடத்தப்பட்டு அதன் முடிவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தை மகாராஷ்டிரா மாநிலமும் இரண்டாவது இடத்தை தமிழ்நாடும் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாத காலம் வரை இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்திய மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது இண்டர்நெட் குறித்த விழிப்புணர்ச்சி தமிழகத்தில் அதிகம் என்பதையே காட்டுகிறது.
இந்தியாவில் மொத்தம் 32.5 கோடி இண்டர்நெட் பயன்படுதி வருவதாகவும் இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 2.77 கோடி பேர் இண்டர்நெட்டை பயன்படுத்வதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது. இதில் 97 லட்சம் பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
அதேபோல் தமிழகத்தில் இண்டர்நெட்டை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை 2.68 கோடி பேர்கள் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தை விட மிகக்குறைந்த அளவில் தமிழகம் இருப்பதாகவும் அந்த புள்ளிவிபரம் கூறுகின்றது.
மூன்றாவது இடத்தில் ஆந்திர மாநிலம் உள்ளது. இம்மாநிலத்தில் 2.39 கோடி பேர்களும், கர்நாடகாவில் 2.17 கோடி பேர்களும் இண்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.
நாட்டின் மொத்த இண்டர்நெட் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையில் 12 கோடி பேர் பிராட்பேண்ட் இணைய சேவையை பயன்படுத்து வருகின்றனர்.
தில்லி (1.84 கோடி), மும்பை (1.52 கோடி), கொல்கத்தாவில் (86 லட்சம்) போன்ற முக்கிய பெரும் மாநகரங்களில் குறைந்த அளவே இண்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.