இதுதான் உண்மையான பிறந்த நாள் கொண்டாட்டம்

இதுதான் உண்மையான பிறந்த நாள் கொண்டாட்டம்

தற்காலத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது ஒரு ஆடம்பர விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்டார் ஓட்டல்களில் பல லட்சங்கள் செலவு செய்து கேக் வெட்டி அந்த கேக்கை சாப்பிடாமல் ஒருவர் முகத்தில் ஒருவர் பூசிக்கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது

ஆனால் இந்த பிஞ்சு குழந்தை தனது பிறந்த நாளை எப்படி கொண்டாடுகிறது தெரியுமா? சாலைகளில் வீடின்றி வாழும் ஏழை மக்கள் குளிரினால் நடுங்குவதை கண்டு தனது பிறந்த நாளில் இந்த சிறுமி அவர்களுக்கு புதிய போர்வை வாங்கி கொடுக்க தனது பெற்றோர்களிடம் கூறி அந்த சிறுமியே தனது கையினால் புத்தம் புது போர்வைகளை அவர்களுக்கு வழங்கியது. போர்வையை வாங்கிய அந்த ஏழைகள் அந்த சிறுமியை மனதார வாழ்த்தினர். இதுதான் உண்மையான பிறந்த நாள் கொண்டாட்டமாக கருதப்படுகிறது

Leave a Reply