இதுதான் சேலை கலாச்சாரமா? தீபிகாவுக்கு குவியும் கண்டனங்கள்

இதுதான் சேலை கலாச்சாரமா? தீபிகாவுக்கு குவியும் கண்டனங்கள்

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு சேலை அணிந்து வந்திருந்தார். சேலை மட்டும்தான் பெண்களை மரியாதையோடு பார்க்க வைக்கும் உடை என்று அனைவரும் நம்பியிருக்கும் நிலையில் தீபிகா கட்டியிருந்த சேலை படுகவர்ச்சியாக இருந்தது.

ஜாக்கெட் என்பது பெயரளவிற்கு இருந்ததால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலர் முகம் சுளித்ததாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் இண்டர்நெட்டில் பரவியபோது நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த ஜாக்கெட்டை போடுவதற்கு சும்மாவே வந்திருக்கலாமே என்று ஒருவரும், பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவுக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுத்த பிராகாஷ் படுகோனேவின் பெயரை கெடுக்கவே தீபிகா வந்துள்ளார் என்று ஒருவரும், எதை மறைக்க வேண்டுமோ அது தெரியும்படியா ஜாக்கெட் போடுவது? நிர்வாணமாக வந்தது போன்று இருக்கிறது. சேலையின் மதிப்பை கெடுத்துவிட்டீர்கள் என்று ஒருவரும் பதிவு செய்து விளாசியுள்ளனர்.

 

Leave a Reply