இதை வன்மையாக கண்டிக்கிறேன்: ஹெச்.ராஜா
கருப்பர் கூட்டம்” என்ற youtube சேனலை தடை செய்யக்கோரி, பாஜக சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், இந்துக்கள் வழிபடும் கடவுளைஆபாசமாக பேசி,வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த சேனலை கண்டித்து கார்டூனிஸ்ட் வர்மா கண்டித்துள்ளார். இதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது
இந்த நிலையில் முருகப்பெருமானின் துதி கந்தசஷ்டி கவசத்தை இழிவாக பேசி விடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் ஹசிப் முகம்மது மீது நடவடிக்கை எடுக்காமல் அதை கண்டித்த கார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்துள்ளது அப்பட்டமான இந்து விரோத நடவடிக்கை. இதை வன்மையாக கண்டிக்கிறேன் என ஹெச்.ராஜா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
முருகப்பெருமானின் துதி கந்தசஷ்டி கவசத்தை இழிவாக பேசி விடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் ஹசிப் முகம்மது மீது நடவடிக்கை எடுக்காமல் அதை கண்டித்த கார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்துள்ளது அப்பட்டமான இந்து விரோத நடவடிக்கை. இதை வன்மையாக கண்டிக்கிறேன். https://t.co/VdMTuNfUfU
— H Raja (@HRajaBJP) July 13, 2020