இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா? முக ஸ்டாலின் கேள்வி
தமிழ் மொழியை விட சமஸ்கிருத மொழி பழமையானது என்று தமிழக அரசின் 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இதுகுறித்து கூறியதாவது:
எப்படிச் சகிப்பது இக்கொடுமையை? தமிழ் 2300ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம். ஆனால் சமஸ்கிருதமோ 4000ஆண்டுகள் பழமையானதாம். இப்படித்தான் சொல்கிறது தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகம்.
காவியை பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்? இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா?