இது நம்மூர் பேருந்து நிறுத்தம் தானா? ஆச்சரியத்தில் கிருஷ்ணகிரி பொதுமக்கள்!

இது நம்மூர் பேருந்து நிறுத்தம் தானா? ஆச்சரியத்தில் கிருஷ்ணகிரி பொதுமக்கள்!

நம்மூரில் உள்ள பெரும்பாலான பேருந்து நிலையங்கள் எப்படி இருக்கும் என்பது தெரிந்ததே. திராவிட கட்சிகள் மாறி மாறி 50 வருடங்கள் ஆட்சி செய்தபோதிலும் ஒரு நல்ல பேருந்து நிலையம் எங்குமே இல்லை என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் டிசிஆர் சர்க்கிள் என்ற பெயரில் பூங்காவுடன் கூடிய பேருந்து நிறுத்தத்தை கிருஷ்ணகிரி நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை அமைத்து கொடுத்துள்ளது.

இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர இருக்கைகள், மின் விளக்குகள், மின்விசிறிகள், மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜர் பிளக் பாயிண்ட், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, அதிவேக இலவச இணையதள வசதி, கண்காணிப்பு கேமராக்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, குப்பைத்தொட்டி , இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக பேசும் வகையிலான தொலைபேசி வசதி என பல்வேறு வசதிகள் இருப்பதால் இந்த பேருந்து நிறுத்தத்தை ஹைடெக் பேருந்து நிறுத்தம் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு தனியார் நிறுவனம் தன் சொந்த செலவில் ஹைடெக் வசதிகளோடு பேருந்து நிறுத்தம் அமைத்துள்ளது அந்த பகுதியில் உள்ளவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது

Leave a Reply