இதெல்லாம் டெல்லியில் உள்ளவர்களுக்கு தெரியாதா? எச்.ராஜா டுவீட்
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து, மக்களவையில் விவாதிக்க தி.மு.க. தரப்பில் இருந்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நோட்டீசை மக்களவை செயலகத்தில் தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வழங்கி உள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து கூறிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ‘வள்ளுவர் கோட்டம், மதுரை உயர்நீதிமன்ற கட்டிடம், தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஸ் நிலையம் எல்லாம் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டியதால் தண்ணீர் பற்றாக்குறை என்று டெல்லியில் உள்ளவர்களுக்கு தெரியாது என்பதால் அங்கு விவாதமா? என்று கூறியுள்ளார்.
எச்.ராஜாவின் இந்த டுவீட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது
வள்ளுவர் கோட்டம், மதுரை உயர்நீதிமன்ற கட்டிடம் தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஸ் நிலையம் எல்லாம் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டியதால் தண்ணீர் பற்றாக்குறை என்று டெல்லியில் உள்ளவர்களுக்கு தெரியாது என்பதால் அங்கு விவாதமா? https://t.co/hu8oTciicF
— H Raja (@HRajaBJP) June 24, 2019