இத்தாலி ஓபன் டென்னிஸ்: நோவாக் ஜோகோவிக் சாம்பியன்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரை உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிக் கைப்பற்றியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர்.

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில், ஜோகோவிக், அர்ஜென்டினா வீரர் டிகோவுடன் மோதினார்

விறுவிறுப்பான இந்த மோதலில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிக் 7-5 , 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இத்தாலி ஓபன் பட்டத்தை 5வது முறையாக ஜோகோவிக் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply