‘இந்தியன் 2’ படம் டிராப்பா? பட்ஜெட்டால் ஷங்கர்-லைகா மோதல்?
இந்தியன் 2′ பட்ஜெட் குறித்து ஷங்கருக்கும் லைகாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த படம் டிராப் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படத்தை ரூ.550 கோடி பட்ஜெட்டில் தயாரித்த லைகா நிறுவனம், கமலின் ‘இந்தியன் 2’ படத்திற்கு அதிக பட்ஜெட் செய்ய விரும்பவில்லையாம். எனவே குறிப்பிட்ட பட்ஜெட்டிற்குள் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை முடிக்க வேண்டுமென லைகா நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் ஷங்கர் தனது படத்தின் பிரம்மாண்டத்தை காண்பிக்க அதிக அளவு செலவு செய்ய விரும்புவதாகவும், இது இரு தரப்பினரிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் ஷங்கர் வேறு தயாரிப்பு நிறுவனத்தை தேடுவதாகவும் கூறப்படுகிறது.