தற்போதைய சூழ்நிலையில் நாடு முழுவதும் திருநங்கைகளுக்கு பலவித சலுகைகளும், உரிமைகளும் கிடைத்து வரும் நிலையில் இந்தியாவின் முதல் கல்லூரி பிரின்சிபலாக திருநங்கை ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நகர் பெண்கள் கல்லூரியின் பிரின்சிபலாக வரும் ஜுன் 9ஆம் தேதி திருநங்கையான மனாபி பண்டோபத்யாயி என்பவர் பொறுப்பேற்க உள்ளார். இவர் தற்போது விவேகானந்தா சடோபார்க்ஷி மகாவித்யாலாயாவில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி பிரின்சிபல் ஒருவராக திருநங்கை தேர்வு செய்யப்பட்டது குறித்து கருத்து கூறிய மேற்குவங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி அவர்கள் இது முழுக்க காலேஜ் சர்வீஸ் கமிஷன் எடுத்த முடிவு. யாருடைய பரிந்துரையும் இன்றி திருநங்கை ஒருவர் தனது திறமையால் இந்த பதவியை பெற்றுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் முதல் திருநங்கை பிரின்சிபல் ஆக பதவியேற்க உள்ள மனாபிக்கு ஃபேஸ்புக், மற்றும் டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.