இந்தியாவில் முதன்முதலாக மோனோ ரயில் நாளை முதல் இயங்க இருக்கின்றது. நாளை மும்பையில் நடக்க உள்ள ஒரு விழாவில் முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவுகான் இந்த மாபெரும் திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.
மொத்தம் நான்கே பெட்டிகள் கொண்ட இந்த ரயில் மும்பை நகரில் 15 நிமிடங்களுக்கு ஒரு முரை இயக்கப்படும் என்று ரயில்வே துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாளை திறப்புவிழா நிகழ்ச்சிக்கு பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். ஞாயிறு முதல் மும்பை நகரில் மோனோ ரயில் இயக்கப்படும். இந்த திட்டம் பின்னர் படிப்படியாக நாட்டின் முக்கிய நகரங்களிலும் விரிவுபடுத்தப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் மும்பையில் புதிய வசதிகளுடன் கூடிய விமானநிலையம் திறக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலை கணக்கிட்டு மக்கள் நல திட்டங்கள் மிக வேகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.