இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவர் நியமனம்

இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவர் நியமனம்

இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

லோக்பால் தேர்வுக் குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் அவர்களும் மற்றும் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக நீதிபதிகள் திலிப் பி.போசலே, பிரதீப் குமார் மொகந்தி, அபிலாஷா குமாரி, அஜய் குமார் திரிபாதி ஆகியோர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நீதித்துறை அல்லாத உறுப்பினர்களாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தினேஷ் குமார் ஜெயின், ஐ.பி.எஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங், டாக்டர் இந்தர்ஜித் பிரசாத் கௌதம் ஆகியோர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் நீதிபதி பினாக்கி சந்திர கோஷ் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஏறக்குறைய 240 நாள்களுக்கு பின் தீர்ப்பு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply