இந்தியாவின் முன்னணி புகையிலை விற்பனை தொழிலதிபர் புற்றுநோயால் மரணம்

இந்தியாவின் முன்னணி புகையிலை விற்பனை தொழிலதிபர் புற்றுநோயால் மரணம்

பொதுமக்களுக்கு புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது புகையிலைதான். அந்த புகையிலை விற்பனையில் இந்தியாவின் முன்னணி இடத்தில் இருந்த மாணிக்சந்த் நிறுவனத்தின் ராசிக்லால் தாரிவால் புற்றுநோயால் காலமானார்.

புற்றுநோய் பாதிப்பு மற்றும் நிமோனியா காய்ச்சல் பாதிப்புகளால் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்ததால் அவர் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆரம்பகாலத்தில் பீடி தொழிலில் இருந்த ராசிக்லால் பின்னர் மாணிக்சந்த் என்ற நிறுவனத்தை தொடங்கி குட்கா என்னும் மெல்லும் வகையிலா புகையிலை தயாரிப்பில் ஈடுபட்டார். இந்தியாவில் முதன்முதலில் குட்காவை தயாரித்தவர் இவர்தான். இவருக்கு பல அரசியல் தலைவர்கள்நெருக்கமாக இருந்தனர்.

Leave a Reply