இந்தியாவில் கருப்புப் பணம் ரூ.30 லட்சம் கோடி

இந்தியாவில் கருப்புப் பணம் ரூ.30 லட்சம் கோடி
 black money
இந்தியாவின் கருப்புப் பணம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 20 சதவீத அளவுக்கு உள்ளது. மொத்தம் ரூ. 30 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக கருப்புப் பண பதுக்கல் குறைந்து வந்தாலும் இந்த அளவானது தாய்லாந்து மற்றும் ஆர்ஜென்டீனா போன்ற சிறிய நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அளவை விட அதிகம் என தெரிகிறது.

கருப்புப் பணத்தை ஒழிக்க அரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளும் இதற்கு முக்கிய காரணமாகும். கருப்புப் பண பதுக்கல் குறைவு காரணமாக கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந் துள்ளது.

கடந்த ஆண்டு 24 சதவீத மாக இருந்த வட்டி அளவு தற்போது 34 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஆம்பிட் கேபிடல் ரிசர்ச் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply