இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் காரணமாகத்தான் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என வட இந்திய மாநிலங்களில் வதந்தி பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உத்தரப்பிரதேசம் பீகார் பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் காரணமாக தான் மிக வேகமாக பரவுகிறது என்றும் 5ஜி அமைக்கப்பட்டிருக்கும் டவரில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என்றும் தவறாக வதந்தி பரவி வருகிறது
இது குறித்து விளக்கம் அளித்துள்ள தொலைத்தொடர்புத்துறை 5ஜி தொழில்நுட்பத்திற்கும் கொரோனா பரவலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் இதுபோன்று வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது