இந்தியாவில் சோதனை செய்யப்படும் 2018 ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்
இந்தியாவில் முதல் தலைமுறை ஃபோர்டு ஃபிகோ 2015-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதன் அப்டேட் செய்யப்பட்ட மாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. பிரபலமான ஹேட்ச்பேக் மாடல்களில் ஒன்றாக இருந்தாலும் விற்பனையில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. எனினும் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் இதனை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டில் 2018 ஃபோர்டு ஃபிகோ வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முழுமையாக மறைக்கப்பட்ட ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. தற்சமயம் சோதனை செய்யப்படும் மாடலில் சில காஸ்மெடிக் மாற்றஙகள் மற்றும் புதிய இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய மாடலில் உள்ள க்ரோம் ஸ்லாட்களுக்கு மாற்றாக புதிய மாடலில் புதிய மெஷ் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கிரில் 2018 மஸ்டாங் மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மேம்படுத்தப்பட்ட பம்ப்பர்கள், பிலாக்டு-அவுட் ஹெட்லேம்ப் மற்றும் புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று பின்புறமும் மேம்படுத்தப்பட்ட பம்ப்பர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஃபோர்டு மாடலின் கேபின் சப்டைல் டுவீக் செய்யப்பட்டலாம் என்றும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட இகோஸ்போர்ட் மாடலில் வழங்கப்பட்டதை போன்ற சின்க் 3, ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட ஆப்ஷன்களை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய ரக மாடல்களிலும் இது போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்படுவதால் ஹேட்ச்பேக் மாடலிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய சீட் அமைப்புகள், புதிய இன்டீரியர் நிறங்கள் மற்றும் புதிய அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் 1.5 லிட்டர் TDCi டீசல் இன்ஜின் வழங்கப்பட்டாலும், ஃபோர்டு இகோஸ்போர்ட் மாடலில் வழங்கப்பட்ட 1.5 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஃபோர்டு ஃபிகோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.