இந்தியாவில் தலைமை பொறுப்புகளில் பெண்கள் வளர்ந்து வருகின்றனர்: லிங்க்டுஇன் ஆய்வில் தகவல்
தொழில் நிறுவனங்களில் பெண் களின் சதவீதம் இப்போதும் குறைவாகவே உள்ள நிலையில், இந்தியாவில் பெண்கள் வேலைக்கு செல்லும் சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது என்று லிங்க்டுஇன் மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. உலக அளவில் ஒப்பிடுகிறபோது இந்தியாவில் தொழில் நிறுவனங்களில் உள்ள பெண்களின் சதவீதம் 25 சதவீதமாக உள்ளது.
லிங்க்டுஇன் ஆய்வில் மேலும் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் பணிய மர்த்தப்பட்டுள்ளனர். மிகப் பெரிய உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில், முக்கிய தலைமைப் பொறுப்புகளில் 25 சதவீதம் பெண் கள் உள்ளனர். எனினும் இந்தியா வில் பெண்கள் இன்னமும் பின் தங்கியுள்ள நிலையில், இவர்கள் தலைமைப் பொறுப்புகளை நோக்கி முன்னேறியுள்ளதையும், இந்தியாவில் இன்னமும் பெண்களுக்கு முன் உள்ள தடைகள், பெண்கள் அதைத் தாண்ட வேண்டிய சவால்களையும் ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 10 நாடுகளில், இதர நாடுகளான கனடா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பெண்கள் அதிக அளவில் தலைமைப் பொறுப்பு களில் உள்ளனர். அங்கு சராசரியாக மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இயக்குநர் அளவிலான பொறுப்புகள் அல்லது அதற்கும் மேலான பொறுப்புகளில் உள்ள னர்.
லிங்க்டுஇன் சர்வதேச அளவி லான புள்ளிவிவரங்கள்படி இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அளவில் பெண் களில் தலைமை பொறுப்புகளில் உள்ள விகிதாச்சாரத்தையும் சுட்டிக் காட்டியுள்ளது.
கல்வி மற்றும் லாப நோக்க மற்ற நிறுவனங்களுக்கும் இதர நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் நிலவும் வேறுபாடுகளையும் அந்த ஆய்வு சுட்டிக் சுட்டிகாட்டியுள்ளது. குறிப்பாக கல்வி மற்றும் லாப நோக்கமற்ற நிறுவனங்கள் அதிக அளவில் பெண்களை பணிக்கு அமர்த்துகின்றன. இந்த துறையில் 47 சதவீதம் பெண்கள் முக்கிய தலைமைப் பொறுப்புகளில் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். இதற்கடுத்து மருந்து மற்றும் ஹெல்த் கேர் துறையில் 46 சதவீத பெண்கள் முக்கிய தலைமைப் பொறுப்புகளில் உள்ளனர். டெக்னாலஜி துறை மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. குறிப்பாக 18 சதவீத பெண்கள் தலைமைப் பொறுப்பில் உள்ளனர். எண்ணெய் மற்றும் எரிசக்தி துறையில் தலைமைப் பொறுப்புகளில் 5 சதவீத பெண்களே உள்ளனர்.
அனைத்து டெக்னாலஜி பணிகளிலும் மூன்று பணிகள் முக்கியமான வளர்ச்சியை கண்டு வருகின்றன. குறிப்பாக அனுபவம் வாய்ந்த டிசைனர் 67 சதவீத வளர்ச்சி, தலைமை தொழில்நுட்ப அதிகாரி 60 சதவீத வளர்ச்சி, வெப் டெவலெப்பர் 40 சதவீத வளர்ச்சி கண்டு வருகின்றனர். 56 சதவீத பெண்கள் மனித வள துறையில் உள்ளனர். பெண்கள் தலைமைச் செயல் அதிகாரிகளாக 18 சதவீதம் உள்ளனர்.
இயக்குநர் நிலையில் பெண் களை பணியமர்த்துவது டெக்னா லஜி நிறுவனங்களில் அதிகரித்துள் ளது. 2008-ம் ஆண்டிலிருந்து 57 சதவீதமாக உள்ளது.
உலக அளவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் லிங்க்டுஇன் இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது.