இந்தியாவில் புதிய மரபணு பருத்தி விதை அறிமுகத்தை கைவிட்டது மான்சான்ட்டோ

இந்தியாவில் புதிய மரபணு பருத்தி விதை அறிமுகத்தை கைவிட்டது மான்சான்ட்டோ

6அடுத்த தலைமுறை மரபணு பருத்தி விதைக்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை மான்சான்ட்டோ நிறுவனம் வாபஸ் பெற்றது. உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் மத்திய அரசின் வர்த்தகக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக புதிய பருத்தி விதை அறிமுகத்தை கைவிட்டது மான்சான்ட்டோ.

இது குறித்து அமெரிக்க மான்சான்ட்டோவின் இந்திய கூட்டாளி நிறுவனம் அனுப்பிய கடிதத்தில், தங்களது தொழில்நுட்பத்தை இந்திய உள்நாட்டு விதை நிறுவன்ங்களுடன் மான்சாண்ட்டோ பகிர்ந்து கொள்ள கட்டாயப்படுத்தும் மத்திய அரசின் முன்னெடுப்புகளுக்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்துள்ளது. மேலும் காட்டன் விதைகளுக்கான விலை நிர்ணய விவகாரத்தில் மத்திய அரசுக்கும், மான்சாண்டோவுக்கும் முரண்பாடுகள் ஏற்கெனவே ஏற்பட்டுள்ளதும், இந்த முடிவின் பின்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் போல்கார்ட்II ரவுண்ட் அப் ரெடி பிளெக்ஸ் டெக்னாலஜியை அறிமுகம் செய்வதிலிருந்து மான்சாண்ட்டோ பின் வாங்கியுள்ளது. இந்தப் புதிய விதைகள் பூச்சிகளினால் பாழாவதிலிருந்து தடுக்கப்படும் தொழில்நுட்பம் கொண்டவை என்று கருதப்படுகிறது.

மான்சாண்ட்டோ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “வர்த்தகம் மற்றும் கட்டுப்பாட்டு நிலவரங்களில் இருந்து வரும் நிச்சயமின்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்றார். ஆனாலும் ஏற்கெனவே இருக்கும் பருத்தி விதை வர்த்தகத்தில் இது எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அவர் கூறினார்.

இந்திய விதை நிறுவனங்களுடன் மான்சாண்ட்டோ தங்களது தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அரசின் முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்ப அரசு தற்காலிகமாக அந்த முடிவை நிறுத்தி வைத்துள்ளது, இது தொடர்பாக கருத்துக்களைக் கேட்டு, அது தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

புதிய மரபணு காட்டன் விதைக்கான அனுமதி கோரு 2007-ம் ஆண்டு மாஹிகோ விண்ணப்பித்திருந்தது. ஏகப்பட்ட கள சோதனைகளுக்குப் பிறகே இதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டிய நிலையில் விண்ணப்பம் அதன் இறுதி கட்டத்தில் இருந்தது.

இந்நிலையில் விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுள்ளதோடு, பொருத்தமான தருணத்தில் போல்கார்ட் 2 ரவுண்ட்-அப் பருத்தி விதைகான அனுமதி விண்ணப்பம் மீண்டும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது மாஹிகோ.

Leave a Reply