இந்தியாவில் மேலும் ரூ.4,915 கோடி முதலீடு செய்யும் சாம்சங்: 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு

இந்தியாவில் மேலும் ரூ.4,915 கோடி முதலீடு செய்யும் சாம்சங்: 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு

இந்தியாவில் மேலும் ரூ.4,915 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும், இதனால் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் சாம்சங் இந்தியா தெரிவித்துள்ளது.

தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம், சர்வதேச அளவில் ஸ்மார்ட்ஃபோன் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம், நொய்டா உள்ளிட்ட சில இந்திய நகரங்களில் அதன் உற்பத்தி தொழிற்சாலையை கொண்டுள்ளது.

இந்நிலையில், நொய்டா தொழிற்சாலையில், ரூ.4,915 கோடி புதிய முதலீடு செய்ய உள்ளதாக, சாம்சங் இந்தியா கூறியுள்ளது. குறிப்பாக, ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பை விரிவுபடுத்த, இந்த முதலீட்டை செய்வதாகவும், இதன்மூலமாக, 15,000 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் சாம்சங் குறிப்பிட்டுள்ளது.

புதிய முதலீட்டின் மூலமாக, ஆண்டுதோறும் 10 கோடி புதிய மொபைல்களை தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நொய்டா தொழிற்சாலையை, இந்திய அளவில் உள்ள அதன் ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பின் மிகப்பெரிய கேந்திரமாக உருவாக்க, சாம்சங் முடிவு செய்துள்ளது. இதற்காக, இப்புதிய முதலீட்டை செய்ய உள்ளதாக, சாம்சங் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply