இந்தியாவில் யமஹா R15 v3.0 வெளியாவது எப்போது?
யமஹா நிறுவனத்தின் R15 v3.0 இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்தில் இந்த பைக் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் யமஹா R15 v3.0 மாடல் அறிமுகம் செய்தது. யமஹா R15 v3.0 மாடலில் பல்வேறு அம்சங்கள் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் யமஹா R15 v3.0 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த அம்சங்கள் வெவ்வேறு அம்சங்களுடன் வெளியாக இருக்கிறது. யமஹா R1 / R6 மாடல்களை தழுவி புதிய R15 வடிவமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தைகளில் எல்இடி வழங்கப்பட்ட நிலையில் இந்தியாவில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள் மற்றும் பக்கவாட்டுகளில் கூர்மையான பாடி வடிவமபை்பு கொண்டுள்ளது.
இதன் ஃபேரிங் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு, இதன் ஃபியூயல் டேன்க் 11 லிட்டர்களாக மாற்றப்பட்டுள்ளது. முந்தைய R15 v2.0 மாடலில் 12 லிட்டர் ஃபியூயல் டேன்க் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்துடன் முந்தைய மாடலில் அனலாக் டேகோமீட்டர் வழங்கப்பட்ட நிலையில், புதிய மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் R1/R6 போன்று காட்சியளிக்கிறது.
இத்துடன் புதிய யமஹா R15 v3.0 மாடலின் பின்புற சீட் முந்தைய மாடல்களை விட உயரம் குறைவாக இருக்கிறது. சர்வதேச மாடலில் அப்சைடு-டவுன் ஃபோர்க் வழங்கப்பட்ட நிலையில், யமஹா R15 v3.0 மாடலில் முன்பக்க ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியா மாடலில் IRC டையர்களை கொண்டுள்ள நிலையில் இந்தியாவில் சோதனை செய்யப்படும் மாடலில் MRF டையர்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய யமஹா R15 v3.0 மாடல் ஏப்ரல் 2018-இல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஏப்ரல் 1, 2018 முதல் விற்பனை செய்யப்படும் 125சிசிக்கு அதிகமான மாடல்களில் ABS அம்சம் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற விதிமுறை அமலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் பயன்படுத்தப்பட இருக்கும் மாடல்களில் ABS அம்சத்தை சேர்க்க ஏப்ரல் 1, 2019 வரை காலக்கெடு வழங்கப்படுகிறது.
தற்போதைய R15 மாடல்களில் வழங்கப்பட்டுள்ளதை விட இந்தியாவில் சோதனை செய்யப்படும் R15 v3.0 மாடலின் இன்ஜின் வி்த்தியாசமாக காட்சியளிக்கிறது. இதனால் புதிய மாடலில் 155சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்டெட் இன்ஜின் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மோட்டார் யமஹாவின் வேரியபிள் வால்வ் அக்யூடேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என்பதால் 19.3 பி.எச்.பி. பவர் மற்றும் 14.7 என்.எம். டார்கியூ கொண்டிருக்கும். இந்தியாவில் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய யமஹா R15 v3.0 மாடல் தற்சமயம் விற்பனை செய்யப்படும் R15 v2.0 மாடலை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் இதன் விலை ரூ.1.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், மும்பை) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.