இந்தியாவில் யூடியூப் கிட்ஸ்
சிறுவர்களுக்கு உகந்த வீடியோக்களைக் கொண்ட ‘யூடியூப் கிட்ஸ்’ செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இதைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
சிறுவயதினர் பார்க்கக் கூடிய வீடியோக்களைக் கொண்டுள்ள இந்தச் செயலி, சிறார்களைக் கவரும் வகையில் பெரிய எழுத்துகளையும் ஐகான்களையும் கொண்டுள்ளது. ஷோக்கள், இசை, கல்வி மற்றும் கண்டறிதல் என நான்கு பிரிவுகளில் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. தவிர, குரல் வழித் தேடல் வசதியும் இருக்கிறது.
லிட்டில் கிருஷ்ணா வீடியோக்கள், யோகா யானை வீடியோக்கள் உள்ளிட்ட வற்றைச் சிறுவர்கள் அணுகலாம். அவர்களுக்கான பிரத்யேக சேனல்களும் உள்ளன.
இந்தச் செயலியைப் பிள்ளைகள் பயன்படுத்தும் விதத்தைப் பெற்றோர் தீர்மானிக்க உதவும் வகையில் பல்வேறு கட்டுப்பாட்டு வசதிகளும் இருக்கின்றன. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்தச் செயலி 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது.
மேலும் தகவல்களுக்கு: http://bit.ly/1LycDcp