இந்தியாவில் 2020ல் 5G சேவை: மத்திய அரசு முடிவு

இந்தியாவில் 2020ல் 5G சேவை: மத்திய அரசு முடிவு

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்வரை 2G சேவை மட்டுமே இருந்த நிலையில் பின்னர் 3G அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் 3G அறிமுகமான ஒருசில மாதங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4Gஐ அறிமுகம் செய்ததால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 4G சேவை கொண்டு வரும் கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது 4G சேவையில் மிக வேகமாக டேட்டாக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் வரும் 2020ஆம் ஆண்டிற்குள் 5G சேவையை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

5G சேவை குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அந்த குழுவில் மூத்த மத்திய அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐஐடி பேராசிரியர்கள் இடம் பெறுவர் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply