இந்தியாவில் 5ஜி சேவையை அனுமதிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பிரபல நடிகை ஜூகி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்
5ஜி சேவையின் கதிர்வீச்சுக்கள் மனிதனை மட்டுமன்றி விலங்குகள் பறவைகள் உள்பட அனைத்து உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இதனால் இந்தியாவில் 5ஜி சேவையை அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்
5ஜி சேவை ஆரம்பித்தால் மனிதர்கள் உள்பட எந்த உயிரினங்களும் ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே இதனை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்
இந்த மனு விரைவில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது