இந்தியாவில் 5G வசதி எப்போது?
இந்தியாவில் தற்போது அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 4G வசதியை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் நிலையில் விரைவில் 5G வசதியை அறிமுகம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இந்திய டெலிகாம் துறை சார்பில் ஐந்தாம் தலைமுறை அல்லது 5ஜி தொழில்நுட்பங்களுக்கான ரோட்மேப் இந்த ஆண்டின் ஜூன் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என டெலிகாம் துறை செயலாளர் அருணா சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
“5ஜி தொழில்நுட்பங்களுக்கான புதிய டெலிகாம் செயல்திட்டம் (NTP 2018) குறித்து வரவேற்க்கக்கூடிய தகவல்களை மத்திய டெலிகாம் துறை பெற்றிருக்கிறது. புதிய டெலிகாம் செயல்திட்டத்திற்கான வரைவு இறுதி கட்டத்தை அடைந்திருப்பதோடு விரைவில் பொது மக்கள் பார்வைக்கும் வரும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த ஆண்டே 5G வசதியை இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.