இந்தியாவை வென்ற பின்னர் ஓய்வை அறிவித்த குக்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றவுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலஸ்டெய்ர் குக் அறிவித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டிதான் குக் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகும்
இங்கிலாந்து அணியின் கேப்டனாக, தொடக்க பேட்ஸ்மேனாக பல போட்டிகளில் விளையாடியவர் அலஸ்டெய்ர் குக். இந்திய அணிக்கு எதிராக 2006ல் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் அறிமுகமானவர் அலஸ்டெய்ர் குக். 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,254 ரன்களை குவித்தவர்.
அதே போல் 92 ஒருநாள் போட்டிகளில் 3204 ரன்களும், 4 டி20 போட்டிகளில் விளையாடி 61 ரன்களும் எடுத்தவர்.
டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை அலஸ்டெய்ர் குக் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்ததாக் கிரஹாம் கூச் 8900 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
இப்படி சிறப்பாக விளையாடி அதிக ரன்களை குவித்த வீரர் ஓய்வை அறிவித்திருப்பது இங்கிலாந்து அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.