இந்தியா இந்துக்களின் தேசம்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

இந்தியா இந்துக்களின் தேசம்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

ஜெர்மனி நாடு ஜெர்மனியர்களுக்கானது என்பது போல், அமெரிக்கா நாடு அமெரிக்கர்களுக்கானது என்பது போல் இந்தியா இந்துக்களுக்கான நாடு என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

இந்தியா இந்துக்களுக்கான நாடு என்றாலும் இந்த நாட்டில் யாரும் விலக்கி வைக்கப்படவில்லை என்று கூறிய மோகன் பகவத், இந்து என்ற சொல் இந்தியர்களின் மரபு மற்றும் கலாச்சாரத்துடன் உள்ளடங்கியது என்று குறிப்பிட்டார்.

அனைத்து மதத்தினர்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியாவில் இதுபோன்ற கருத்துக்கள் வேற்றுமையை ஏற்படுத்தும் என்று மோகன் பகவத் அவர்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply