இந்தியா இலங்கை டி20 போட்டி ரத்து ஏன்? அதிர்ச்சி காரணம்

இந்தியா இலங்கை டி20 போட்டி ரத்து ஏன்? அதிர்ச்சி காரணம்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெறவிருந்த முதலாவது டி20 போட்டி ரத்து செய்யப்பட்டதால் இந்த போட்டியை நேரில் பார்க்க வந்த ரசிகர்கள் கடும் ஆத்திரம் அடைந்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அசாம் மாநிலத்தில் ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டம் காரணமாக பதட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கு பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது

இந்த நிலையில் மழை காரணமாக இந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்ததும் ரசிகர்கள் சிலர் வன்முறையில் இறங்க தொடங்கினார். ஆனால் உடனடியாக பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்ததால் பதற்றம் குறைந்தது

இருப்பினும் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் போட்டியை மாலை 4 மணிக்கு அல்லது அதற்கு முன்னதாகவோ போட்டியை ஆரம்பித்து இருக்கலாம் என்றும் இந்த போட்டி ரத்து ஆனதற்கு பிசிசிஐயின் நடவடிக்கையே காரணம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply