இந்தியா தயாரா? காஷ்மீர் பிரச்சனை குறித்து இம்ரான்கான் கேள்வி

இந்தியா தயாரா? காஷ்மீர் பிரச்சனை குறித்து இம்ரான்கான் கேள்வி

பாகிஸ்தான் பிரதமர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பிரதமர் பதவிக்கு போட்டியிட்டுள்ள இம்ரான் கான் காஷ்மீர் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய இம்ரான் கான், காஷ்மீர் பிரச்சனை குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “காஷ்மீர் இரு நாடுகளுக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனை. கடந்த 30 ஆண்டுகளில், காஷ்மீரில் இந்திய ராணுவத்தால், பல மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதை நிறுத்திவிட்டு, ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும்.

இந்தியா சமாதானத்துக்கு ஒரு அடி முன்னெடுத்தால், பாகிஸ்தான் இரண்டு அடி முன்னெடுக்கும். இந்தியா தயாராக இருந்தால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை நான் வலுப்படுத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply