இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையால் தள்ளிப்போகிறதா தேர்தல்?

election commission

இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையால் தள்ளிப்போகிறதா தேர்தல்?

election commissionபுல்வாமா தாக்குதல், இந்தியாவின் பதிலடி, பாகிஸ்தான் ராணுவத்தினர்களால் அபிநந்தன் கைது, இந்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை என கடந்த சில நாட்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஒரு பதட்டமான சூழல் இருந்து வரும் நிலையில் இதன் காரணமாக பாராளுமன்ற தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ‘இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையேயான பிரச்சனையால் தேர்தல் தள்ளிப்போகாது என்றும் குறிப்பிட்ட நேரத்தில் தேர்தல் நடக்கும் என்றும் தெரிவித்தார்.

எனவே வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் திட்டமிட்டபடி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்பதே தற்போதைய நிலை ஆகும்

Leave a Reply