இந்தியா பாகிஸ்தான் போர் பதட்டம் குறித்து பெண்டகன் கவலை

இந்தியா பாகிஸ்தான் போர் பதட்டம் குறித்து பெண்டகன் கவலை

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதட்டம் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் தற்போதைய சூழல் கவலை அளிப்பதாகவும், இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், மத்திய பாதுகாப்பு படை கமாண்டர் ஜோசப் வோட்டல் மற்றும் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி (பொறுப்பு) பேட்ரின் ஷானகான் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

பதற்றத்தை தணிப்பதில் மந்திரி ஷானகான் கவனம் செலுத்தி வருகிறார். இரு நாடுகளும் மேற்கொண்டு ராணுவ நடவடிக்கை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply