இந்திய அணியின் தோல்விக்கு பேராசை பிடித்த பிசிசிஐ கார்ணம்: வர்ணனையாளர்கள் கண்டனம்
இங்கிலாந்து நாட்டின் அணிக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் முன்னாள் வீரர்களும் வர்ணனையாளர்களும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பலர் பிசிசிஐ சில ஆண்டுகளாகச் செயல்படும் விதம் மற்றும் பணத்தாசை, பேராசை பிடித்த பிசிசிஐ-யின் செயல்பாடுகளே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்று தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மஞ்சுரேக்கர், சேவாக் உள்ளிட்டோர் கூறியிருப்பதாவது:
மஞ்சுரேக்கர்: இந்திய அணியின் பேட்டிங் வேதனையையும் துன்பத்தையும் பார்க்கும் அதே வேளையில் ஆண்டர்சன், பிராட் ஆகியோர் பந்து வீச்சை பார்ப்பதில் ஏற்படும் இன்பத்தையும் காணாமல் இருப்பது சாத்தியமற்றதே.
சேவாக்: இந்திய அணி மிகவும் மோசம். நன்றாக ஆடாத போது நாம் இந்திய அணிக்கு உறுதுணையாக இருப்போம் என்றாலும் ஒரு சிறு எதிர்ப் போராட்டம் இல்லாமல் சரணடைந்தது ஏமாற்றமாக உள்ளது. மீண்டு எழும் தன்னம்பிக்கையும் மன உறுதியும் அவர்களுக்கு இருக்கும் என்று நம்புவோமாக.
மொகமத் கைஃப்: இந்தியா 2 இன்னிங்ஸ்களிலும் 82 ஓவர்களில் முடிந்தது. தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல் செய்ததையே மீண்டும் செய்வதைப் பார்க்கும் போது வெறுப்பாக இருந்தது. அனைத்து புலங்களிலும் நம்மை காலி செய்து விட்டது இங்கிலாந்து.
மைக்கேல் வான்: இங்கிலாந்தின் சூழ்நிலை… ஆம், இங்கிலாந்தின் தட்ப வெப்பம்… ஆம். இங்கிலாந்து வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்போம் ஆம், ஆனால் 2 நாட்களில் நம்பர் 1 அணியை சம்மட்டியடி அடித்தது ஒரு முயற்சி இல்லாமல் நடக்காது.