இந்திய இறக்குமதி பொருட்கள் மீது அதிக வரி: டிரம்ப் அறிவிப்பு
இந்திய இறக்குமதி பொருட்கள் மீது இனிமேல் அதிகமான வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது இந்திய ஏற்றும்தியாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது
அமெரிக்காவில் சமீபத்தில் 4 நாட்கள் கன்சர்வேட்டிங்க் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் இறுதி நாளில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா ஒரு உயர் வரி விதிப்பு நாடு என்று கூறினார்.
முன்னதாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கு அமெரிக்கா வரி விதிப்பதில்லை என்று சுட்டிக் காட்டிய அவர், ஆனால் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் இருசக்கர வாகங்களுக்கு இந்தியா 100 சதவீகித வரி விதிப்பதால் இனிமேல் இந்திய பொருட்கள் மீது இனி அமெரிக்கா அதிக வரி விதிக்கும் என தெரிவித்தார்