இந்திய கரன்ஸிகளுக்கு நேபாளம் தடை: அதிர்ச்சி தகவல்

இந்திய கரன்ஸிகளுக்கு நேபாளம் தடை: அதிர்ச்சி தகவல்

இந்திய அரசின் ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகளை மக்கள் பயன்படுத்த நேபாள அரசு திடீர் தடை விதித்துள்ளதாகவும், அதேசமயம், 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக நேபாள மக்கள் இந்தியாவின் உயர்மதிப்பு கொண்ட நோட்டுகளை வைத்திருக்க வேண்டாம் என்றும் அந்நாடு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நேபாள தகவல் மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் கோகுல் பிரசாத் பஸ்கோடா அளித்த பேட்டியில், “ நேபாளத்தில் இந்திய அரசின் ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த உயர்ந்த மதிப்புள்ள நோட்டுகளைப் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும், கையில் வைத்திருக்கவும் வேண்டாம். மாறாக, இந்திய அரசின் 100 ரூபாய் நோட்டுகள் மட்டும் புழக்கத்துக்கு பயன்படுத்தலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்தார். ஆனால், எதற்காக இந்திய ரூபாய் நோட்டுகளை நேபாள அரசு திடீரென தடை செய்துள்ளது என்பதற்கான காரணத்தை அவர் கூறமறுத்துவிட்டார்.

Leave a Reply