தென்னாப்பிரிக்காவில் புதிய வகை வைரஸ் பரவி வருவதை அடுத்து வரும் டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா தொடர் ரத்தாக வாய்ப்பு உள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 17ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது.
இதனை அடுத்து மத்திய அரசின் அனுமதிக்காக பிசிசிஐ காத்திருப்பதாகவும் மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றால் இந்த தொடர் ரத்தாகும் என்று கூறப்படுகிறது.