இந்திய பிரதமர் ஒரு வாய்ப்பை எங்களுக்கு அளிக்க வேண்டும்: பாகிஸ்தான் கோரிக்கை

இந்திய பிரதமர் ஒரு வாய்ப்பை எங்களுக்கு அளிக்க வேண்டும்: பாகிஸ்தான் கோரிக்கை

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானியர்கள் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரத்தை இந்தியா அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆதாரத்தை கொடுத்து இந்தியா எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது

புல்வாமா தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பதால் பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை இந்தியா மிக விரைவில் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானியர் ஈடுபட்டிருப்பதற்கான நம்பகமான ஆதாரத்தை இந்தியா அளித்தால் உடனடியாக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்றும், அமைதியை நிலைநாட்ட ஒருவாய்ப்பாக இந்திய பிரதமர் இதை அளிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில் பாகிஸ்தான் அரசு தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply