இந்திய பிரதமர் நரேந்திரமோடி மிகப்பெரிய தீவிரவாதி: பாகிஸ்தான் அமைச்சர்

இந்திய பிரதமர் நரேந்திரமோடி மிகப்பெரிய தீவிரவாதி: பாகிஸ்தான் அமைச்சர்

தீவிரவாதிகளின் புகழிடமாக பாகிஸ்தான் இருந்து வருவது உலக நாடுகள் அனைத்தும் அறிந்துள்ள நிலையில் இந்திய பிரதமர் நரேந்திரமோடிதான் உலகின் மிகப்பெரிய தீவிரவாதி என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது முஸ்லிம்களின் ரத்தக்கரை படிந்த கைகளுக்கு சொந்தக்காரரான ஒருவர், தற்போது இந்தியாவின் பிரதமராக இருக்கின்றார். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்னும் ஒரு தீவிரவாத அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். என்னும் தீவிரவாத அமைப்பின் கிளைக் கட்சிதான் பாஜக’ என்று மேலும் அவர் கூறியுள்ளார்

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் இந்த கருத்துக்கு இந்திய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply