இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு
வங்கியில் வேலை செய்ய வேண்டும் அதுவும் இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை செய்ய வேண்டும் என்பதே தனது குறிக்கோளாக கொண்டுள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
இன்று வெள்ளிக்கிழமை (நவ.17) 526 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு 25 வயதுக்குள் இருக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 526 (இதில் சென்னைக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)
பணி: Office Attendants
தகுதி: 01.11.2017 தேதியின்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,940 – 23,700
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.12.2017
எழுத்துத் தேர்வு: வரும் 2018 ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறலாம். 120 மதிப்பெண்கள் கொண்டது. 120 வினாக்கள் அடங்கிய இந்த தேர்வு 90 நிமிடங்கள் நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVT1711201727D94F07DCD34715BF1B96E3DDDCEF60.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்