இந்திய வரலாற்றில் முதல் முறையாக 1000 ரூபாயை தாண்டிய எரிவாயு சிலிண்டர்
மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் இந்திய வரலாற்றில் முதல் முறையாக 1000 ரூபாயை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த சில மாதங்களுக்கு முன் 700 ரூபாய் இருந்த சிலிண்டரின் விலை தற்போது படிப்படியாக விலை உயர்ந்து தற்போது 1000 ரூபாயை எட்டியுள்ள்து
14.2 கிலோ எடை கொண்ட மானியமற்ற சிலிண்டர் பெங்களூரில் ரூ.941ஆக விற்பனை செய்யப்பட்டாலும், கர்நாடக மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் ஒரு சிலிண்டர் விலை ரூ.1,015 என்ற விலையில் விற்கப்படுகிறது.
தமிழகத்தில் சிலிண்டரின் விலை ரூ.960 என்று விற்கப்பட்டாலும் சிலிண்டர் கொண்டு வருபவருக்கு கொடுக்க வேண்டிய தொகையை சேர்த்தால் ரூ.1000 என்ற விலை ஆகிவிடுகிறது.
பெட்ரோல் ,டீசல் விலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் சிலிண்டரின் விலையையும் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.