இந்தி திணிப்பு பிரச்சனை குறித்து நிர்மலா சீதாராமன் டுவீட்!

இந்தி திணிப்பு பிரச்சனை குறித்து நிர்மலா சீதாராமன் டுவீட்!

தாய்மொழி, ஆங்கிலம் தவிர இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழி கொள்கை கொண்டு வர பரிசீலிக்கப்படும் என்ற மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது:

மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும். பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும்.

Leave a Reply