இந்து தலைவர்களை கொன்றால் கை நிறைய பணம், தென்னாப்பிரிக்காவில் வேலை. தாவூத் இப்ராஹிம் அறிவிப்பா?

இந்து தலைவர்களை கொன்றால் கை நிறைய பணம், தென்னாப்பிரிக்காவில் வேலை. தாவூத் இப்ராஹிம் அறிவிப்பா?
dawood
இந்து மதத் தலைவர்களை கொன்றால், கை நிறைய பணமும், தென் ஆப்ரிக்காவில் வேலையும் வழங்கப்படும் என  மும்பை தாதா தாவூத் இப்ராஹிம் கூறியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் இந்து அமைப்பை சேர்ந்த பரூச் ஷிரிஷ் பன்காலி, பிரக்னேஷ் மிஸ்திரி ஆகிய 2 பேர்களை மும்பை தாதா தாவூத் இப்ராஹிமின் ஆட்கள் சுட்டுக் கொலை செய்தனர்.  இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்ததில், 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனை தூக்கிலிட்டதற்கு பழிக்குப் பழியாக 2 பேரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

ஆனால் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள், கைதான தாவூத் இப்ராஹமின் ‘டி கம்பெனி’ நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், இந்தியாவில் மதக்கலவரத்தை தூண்டி விடும் வகையிலும் தாவூத் சதித்திட்டம் தீட்டியுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும், இந்து மதத் தலைவர்களை கொலை செய்பவர்களுக்கும், கிறிஸ்துவ சர்ச்சுகளில் பெட்ரோல் குண்டுகளை வீசி மதக்கலவரத்தைத் தூண்டுபவர்களுக்கும் கைநிறைய பணமும், தென்னாப்பிரிக்காவில் பல லட்சம் சம்பளத்துடன் வேலையும் கிடடக்கும் என டி கம்பெனி’ அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆபரேஷனை செயல்படுத்த பாகிஸ்தானை சேர்ந்த ஜாவேத் சிக்னா, தென் ஆப்பிரிக் காவின் ஜஹித் மியான் என்கிற ஜாவோ இருவரையும் தாவூத் இப்ராஹிமின் ‘டி-கம்பெனி’ களம் இறக்கியுள்ளது. இதில் பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங்தள் ஆகிய தலைவர்களை கொலை செய்ய ஜாவேத் சிக்னா திட்டமிட்டு, இதற்காக ரூ.50 லட்சம் குஜராத்துக்கு ஹவாலா மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை கொல்வதற்கு சதி திட்டம் தீட்டி செயல்படுத்துவதற்கு முன்னர் என்.ஐ.ஏ அதிகாரிகள் உஷாராகி இரண்டு பாகிஸ்தானியர்களையும் கைது செய்துள்ளனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply