இந்து தீவிரவாதம் குறித்த கருத்து: கமல்ஹாசனின் உருவப்படம் ஆந்திராவில் எரிப்பு

இந்து தீவிரவாதம் குறித்த கருத்து: கமல்ஹாசனின் உருவப்படம் ஆந்திராவில் எரிப்பு

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்த இந்து தீவிரவாதம் குறித்த கருத்துக்கு ஏற்கனவே பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது உபி நீதிமன்றத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதும் கமல்ஹாசனுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து ஜனா ஜகாரானா சமிதி என்ற அமைப்பு போராட்டம் நடத்தியது .மேலும் கமல்ஹாசனின் உருவப்படத்தையும் அவர்கள் எரித்து தங்கள் எதிர்ப்பை தெரியப்படுத்தினர்

இந்த நிலையில் நேற்று ரசிகர்களை சந்தித்த கமல், தான் அரசியலுக்கு வருவதும், அரசியல் கட்சி தொடங்குவதும் உறுதி என்றும், தனது பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி இதற்காக ஒரு செயலியை வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

 

Leave a Reply