இந்து முன்னணி ராமகோபாலன் மருத்துவமனையில் அனுமதி: மூச்சுத்திணறலா?

இந்து முன்னணி அமைப்பின் மூத்த தலைவர் ராமகோபாலன் அவர்கள் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது இதனால் அந்த அமைப்பினர் களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவருடைய உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

மேலும் அவருக்கு கொரோனா சோதனை நடத்தி இருப்பதாகவும் சோதனை முடிவுகள் வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Leave a Reply