இந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம்: 347 பேர் பலி
இந்தோனேஷியா நாட்டில் கடந்த ஞாயிறு அன்று ரிக்டர் அளவில் 6.9 என பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.இதில், அங்குள்ள லாம் போக் தீவு என்ற பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஜிலி, பாலி, சும்பாவா, கிழக்கு ஜாவா ஆகிய பகுதிகளிலும் நில நடுக்கத்தின் பாதிப்பு இருந்தது.
லாம்போக்கில் கிட்டத்திட்ட 80 சதவீத கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகிவிட்டதாகவும் இந்த பூகம்பத்தால் இதுவரை 347 பேர் பலியாகி இருப்பதாகவும், 1447 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அந்த நாட்டு செய்தி நிறுவனமான அண்டாரா தெரிவித்துள்ளது.
1 லட்சத்து 60 ஆயிரம் பேர் சொந்த இடங்களை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். ஹயான்கான் என்ற இடத்தில் தான் உயிர்பலி மிக அதிகமாக உள்ளது.
இன்னும் பல பகுதிகளில் இடிபாடுகளை அகற்றவில்லை. அங்கும் பலர் சிக்கி கிடக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
பூகம்பம் ஏற்பட்ட போது ஜிலி தீவில் ஏராளமான வெளிநாட்டினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தனர். அவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய அரசு தெரிவித்துள்ளது