இந்த ஆண்டின் எனது முதல் கோரிக்கையை நிறைவேற்றிய அரசுக்கு நன்றி: ராம்தாஸ்
நேற்று சட்டப்பேரவையில் இளையதலைமுறையினர்களை சீரழிக்கும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது
இந்த நிலையில் இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தனது டுவிட்டரில் கூறியபோது ‘இளைய தலைமுறையை சீரழிக்கும் டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்பது தான் இந்த ஆண்டின் முதல் நாளில் நான் வெளியிட்ட அறிக்கை. அந்த கோரிக்கைக்கு சட்டப்பேரவையில் அனைத்துத் தரப்பின் ஆதரவும் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. டிக்-டாக் ஒழியட்டும். இளையதலைமுறை மீளட்டும்! என்று கூறியுள்ளார்.
டிக்-டாக் தடை குறித்த தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இளைய தலைமுறையை சீரழிக்கும் டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்பது தான் இந்த ஆண்டின் முதல் நாளில் நான் வெளியிட்ட அறிக்கை. அந்த கோரிக்கைக்கு சட்டப்பேரவையில் அனைத்துத் தரப்பின் ஆதரவும் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. டிக்-டாக் ஒழியட்டும். இளையதலைமுறை மீளட்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 13, 2019