இந்த ஆண்டு ஆப்பிளில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட App எது தெரியுமா?
இந்த வருடம் ஆப்பிள் ஏப் ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட டாப் 10 ஆப்ஸ்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். அத்துடன் இந்த ஆண்டின் சிறந்த ஆப், சிறந்த கேம் இரண்டையும் அறிவித்துள்ளது. டாப் 10 இலவச ஆப்கள் பற்றிய குட்டி இன்ட்ரோ இங்கே…
1) Snapchat – இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷனாக மட்டும் இல்லாமல் இது ஒரு இமேஜ் மெசேஜிங் ஆப்…..வாட்ஸ்அப் போல மிக வேகமாக வளர்ந்துவருகிறது இந்த ஸ்னாப்சாட். இந்த ஆண்டு அதிகம் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டவுன்லோடு செய்யப்பட்டது ஸ்னாப்சாட்தான்.
2) Messenger – நாம் அனைவருக்கும் தெரிந்த ஆப் இது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு மெசேஜிங் ஆப் இது. இதன் மூலம், வீடியோ கால், வாய்ஸ் கால் என எல்லா வகை வசதிகளும் இதில் உண்டு. தற்போது புதிதாய் வந்த இதன் அப்டேட்டில், நாம் நார்மலாக உபயோகிக்கும் மெசேஜிங்க் ஆப்பையும் பயன்படுத்த இயலும். இதை நம்மை இன்ஸ்டால் செய்ய வைக்க ஃபேஸ்புக் பட்டபாடு, ஃபேஸ்புக் பயன்படுத்திய அனைவரும் அறிந்ததுதான்.
3) Pokeman Go – ஜூன் மாதம்தான் இது லான்ச் ஆனது என்றாலும், எதிர்பார்த்ததை விடவும் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது, வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்து விளையாடுவதுதான் கேமிங் என்ற தோற்றத்தை மாற்றியதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி. ஊர் ஊராக, தெரு தெருவாக போக்கிமான் பிடிக்கவைத்து ஆக்மென்டட் ரியாலிட்டியில் அசத்தியது இந்த போக்கிமான் கோ.
4) Instagram – ஏற்கெனவே பிரபலமான சமூக வலைத்தளம்தான் இன்ஸ்டாகிராம். இந்த ஆண்டின் டாப் 10 பட்டியலில் 4-வது இடம் பிடித்திருக்கிறது இன்ஸ்டா. ஃபேஸ்புக் வாங்கிய நிறுவனம்தான் இந்த இன்ஸ்டாகிராம். ஆனால் இந்த பட்டியலில் ஃபேஸ்புக்கையே முந்தியிருக்கிறது.
5) Facebook – என்னடா இன்னமும் இந்த பெயர் வரவில்லையே என்று நினைப்பவர்கள் தான் அதிகம்…. தெரியும், நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எங்களுக்கு தெரியும். ஃபேஸ்புக் பற்றி உங்களுக்கு தெரியாததா மக்களே?
6) Youtube – கூகுளின் வீடியோ உலகம்தான் இந்த யூ-டியூப் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இசை, அரசியல், வரலாறு, சினிமா, விளையாட்டு, கார்ட்டூன் என கலந்துகட்டி என்டர்டெயின் செய்யும் மினி தியேட்டர் இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது 6-வது இடத்தைப் பெற்றிருக்கிறது.
7) Google Maps – புதிய ஊர், புதிய நாடு எனப் பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டும் ஆண்ட்ராய்டு வழிகாட்டி. இதன் துல்லியத்தன்மை காரணமாக இதன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
8) Pandora – இது ஒரு வகையான ரேடியோ ஆப். ப்ளே ஸ்டோர் மூலம் இதனை டவுன்லோட் செய்து கொண்டால், எந்த ரேடியோ ஸ்டேஷன் வேண்டும் அதை தேர்வு செய்து கொள்ளலாம். பாடலாசிரியர், நடிகர், காமெடியன்கள் என, உங்களுக்கு விருப்பமானவர்களின் விருப்பமான ப்ளே லிஸ்டை வைத்துகொள்ளலாம். இந்த ஆப்பில் அக்கவுன்ட் உருவாக்கி உபயோகப்படுத்துவதன் மூலம், நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது காரிலோ…எங்கு கனெக்ட் செய்து கேட்டுக் கொள்ளலாம்….இதில் இருக்கும் ஒரே ஒரு பிரச்னை, இது அதிக அளவு மொபைல் டேட்டாவை இழுக்கும். அதனால், வை-ஃபை யில் பயன்படுத்துங்கள் என்று நிறுவனமே அறிவுரை கூறியுள்ளது.
9) Netflix – முழுக்க முழுக்க படங்கள் மற்றும் சீரியல்களுக்கான ஆப் இது. இதில் ஒருமுறை மெம்பர் ஆவதன் மூலம், எத்தனை சீரியல்கள் படங்களை வேண்டுமானாலும் கண்டு களித்திடலாம். இதற்கு போட்டியாக இன்னும் பல நிறுவனங்கள் களமிறங்க உள்ளன.
10) Spotify Music – இது ஒரு மியூசிக் ஆப் மக்களே!!!! உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்களை தனியே ப்ளே லிஸ்ட் போட்டு வைத்துக் கொள்ளலாம். பிடித்த பாடல்களை இதனுள்ளேயே டவுன்லோடு செய்வதன் மூலம், விரும்பும் போதெல்லாம் அவற்றை ஆஃப்-லைனில் கேட்டுக் கொள்ளலாம். இடையில் விளம்பரங்கள் தொல்லைகள் இருக்காது…..பாடகர்கள் வாரியாகவோ, பாட்டின் வாரியாகவோ.. உங்களுக்கு பிடித்த பாடலை தனியாக ஃபோல்டர் போட்டு வைத்துக்கொள்ளலாம். நினைக்கும் நேரத்தில் நினைக்கும் பாடலை கேட்க உதவும் இந்த ஆப்.
அத்துடன் இந்த ஆண்டின் சிறந்த ஆப்பாக ‘பிரிஸ்மா’-வை டிக் அடித்திருக்கிறது ஆப்பிள். சிறந்த கேமாக ‘கிளாஷ் ராயலே’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரின் தேர்வும் இதேதான். கிளாஷ் ஆப் கிளான்ஸ் கேமை உருவாக்கிய சூப்பர்செல் நிறுவனத்தின் மற்றொரு கேம்தான் இந்த கிளாஷ் ராயலே.
பிரிஸ்மா ஆப் பற்றி சொல்லவே தேவையில்லை. உங்கள் கியூட் செல்ஃபிக்களை, செல் டிஸ்ப்ளேயில் தீட்டிய ஓவியம் போல மாற்றும் இதன் மவுசு இன்னும் குறையவேயில்லை எனலாம்.