இந்த ஆண்டு எனக்கு ரூ.11 கோடி நஷ்டம்: விஜய்சேதுபதி
நடிகர் விஜய்சேதுபதி நடித்த ‘சீதக்காதி’ திரைப்படம் இன்’று வெளியாகியுள்ள நிலையில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த விஜய்சேதுபதி இந்த ஆண்டு ரூ.11 கோடி பொருளாதார ரீதியில் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதற்கு என்ன காரணம் என்றே எனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து கூறியபோது, ‘ரஜினி போன்ற பெரிய நடிகருக்கு எதிராக வில்லனாக நடிக்கும்போது, நாம் வேகமாக இருக்க வேண்டும். அவர் என்ன செய்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார்போல நடிக்க வேண்டும். அவருடன் நடிப்பது என்பது நடிப்புக்கான வகுப்பில் கற்றது போல இருந்தது என்று கூறினார்