இந்த ஆண்டு கோடை எப்படி இருக்கும்?

இந்த ஆண்டு கோடை எப்படி இருக்கும்?

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகும் கோடைக்காலம், இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று வானிலை மையம் கொடுத்துள்ள தகவல்களை தற்போது பார்ப்போம்.

வட இந்தியாவின் பல பகுதிகளில் சராசரி கோடைவெப்ப நிலையை விட குறைந்தது 1 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பநிலை இருக்கும் என்று அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. வழக்கமான வெப்பநிலை என்ற சொற்றொடர் 1981 முதல் 2010-வரையிலான மார்ச்-மே வெப்ப அளவைக் குறிக்கிறது. கடந்த செவ்வாயன்று பாலக்காடு முதல் மும்பை வரை இந்தியாவின் பல பகுதிகளில் 35 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெயில் பதிவானது.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல், கிழக்கு, மேற்கு ராஜஸ்தான், உத்தராகண்ட், கிழக்கு மேற்கு உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், விதர்பா, குஜராத் அருணாச்சல் ஆகிய மாநிலங்களில் கடும் கோடை எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பில் தமிழ்நாடு, தெற்கு கர்நாடக உள்பகுதிகள், ராயலசீமா ஆகிய பகுதிகளிலும் நடப்பு கோடையில் வெப்ப அளவு 0.5 டிகிரி செல்சியஸிலிருந்து 1 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று ஐஎம்டி கூறியுள்ளது.

மேலும் 1901-ம் ஆண்டுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு 4-வது கடும் கோடை ஆண்டு என்று ஐஎம்டி ஏற்கெனவே தெரிவித்திருந்தது. பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம், கடல் மேற்புற வெப்ப நிலை அதிகரிப்பினால் இந்த கோடை வெயில் கடுமையாகிறது.

Leave a Reply