இந்த ஆண்டு சபரிமலை செல்ல பக்தர்களுக்கு அனுமதி உண்டா? பரபரப்பு தகவல்

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து இலட்சக்கணக்கானோர் சபரி மலைக்குச் செல்ல இருக்கும் நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்த ஆண்டு சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி இருந்தது

இந்த நிலையில் இதுகுறித்து கேரள அரசு விளக்கம் அளித்துள்ளது சபரிமலை சீசன் ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் இந்த ஆண்டு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது

ஆனால் அதே நேரத்தில் பத்து வயதுக்கு குறைவானவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளது. அதேபோல் ஆன்லைன் வரிசை சிஸ்டத்தில் மட்டுமே கோயில் சுவாமியை தரிசிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது

கோவிலுக்கு செல்பவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதேபோல் கோயிலில் இரவில் தங்கி சுவாமியை தரிசிக்க அனுமதி கிடையாது என்றும் பம்பை நதியில் நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

கேரளா, சபரிமலை, பக்தர்கள், கொரோனா

Leave a Reply